ஆய்வு அத்தியாயம் சமர்ப்பித்தல்
(Book Chapter Publishing)
- தமிழ் மொழியில் ஆய்வுக்கட்டுரை எழுதலாம்.
- புத்தக அத்தியாயத்துக்கான ஆய்வுக் கட்டுரை ஏ4 அளவு தாளில், 12 எழுத்தளவில், 1.15 இடைவெளியுடன், 15 பக்கங்களுக்குக் குறையாமலும் 25 பக்கங்களுக்கு மிகாமலும் ஏரியல் ஒருங்குறி (யுனிகோடு, தமிழ்) எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட வேண்டும். அடிக்குறிப்புகள் (ஆசிரியர் பெயர்,ஆண்டு) மற்றும் துணைநூற் பட்டியல் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) இடம் பெற்றிருக்க வேண்டும்
- ஆய்வுக்கட்டுரையின் முதல் பக்கத்தில் ஆய்வுக்கட்டுரையை மையமிட்ட பொருத்தமான தலைப்பு , ஆய்வாளர் பெயர், ORCID எண் , பணியிட முகவரி (பேராசிரியர் எனில்) அல்லது கல்வி நிறுவன முகவரி (ஆய்வு மாணவர் எனில்), மின்னஞ்சல் முகவரி மற்றும் புலன எண் (watsapp phone number) இடம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வு மாணவர் எனில் ஆய்வு மாணவரின் தகவல்களோடு நெறியாளரின் பெயரும் பணியிட முகவரியும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
- ஆய்வு மாணவர்கள் அவரவர் ஆய்வுத் தலைப்புகளில்தான் கட்டுரை எழுத வேண்டும்.நெறியாளரின் அனுமதிப் பெற்று திருத்தம் செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரையைத்தான் அனுப்ப வேண்டும். நெறியாளரின் பெயர்,பணியிட முகவரி,அலைப்பேசி எண் ஆகியவற்றைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.
- கட்டுரையாளர்கள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை, கருத்துப்பிழை, வாக்கியப் பிழையின்றி கட்டுரை அனுப்புதல் வேண்டும்.
- ஆய்வுச்சுருக்கம்: ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆய்வுச் சுருக்கம் கட்டாயமானது. ஆய்வு சுருக்கமானது 250 – 300 வார்த்தைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டாயம் இடம் பெறல் வேண்டும். மேற்கோள்: ஆய்வுச் சுருக்கத்தில் மேற்கோளைத் தவிர்த்து நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- திறவுச் சொற்கள்: ஆய்வுக்கட்டுரைக்கு நெருங்கிய தொடர்புடைய ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட பொருத்தமான திறவுச் சொற்கள் (key words) 5 முதல் 10 சொற்கள் வரை பயன்படுத்தலாம்.
- ஆய்வுக் கட்டுரைத்தலைப்பு (Topic), ஆய்வுச் சுருக்கம் (Abstract) , திறவுச் சொற்கள் (Key words) ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- துணை நூற்பட்டியல்:கட்டுரைக்குத் தேவையான தகுந்த நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு அடிக்குறிப்பில் தருவதோடு கட்டுரையின் இறுதியில் துணை நூற்பட்டியலில் மேற்கோளில் பயன்படுத்தப்பட்ட அடிக்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்த புத்தகம், ஆய்விதழ், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள் முதலானவற்றின் முழுத்தகவலும் (ஆசிரியர் பெயர், நூல் பெயர், பதிப்பகம், பதிப்பக முகவரி, ஆண்டு)அகரவரிசையில் துணை நூற்பட்டியல் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் தேவை இல்லாத சுருக்கக் குறியீடுகள் மற்றும் பின் குறிப்புக்களைத் தவிர்க்கவும்.கட்டுரையில் பயன்படுத்தாத நூல்கள் துணை நூற்பட்டியலில் பதிவு செய்யக்கூடாது.
- கட்டுரை அனுப்பும் முறை: தட்டச்சு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை word formate இல் painthamizhpathippakam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். எங்கள் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் தரமான ஆய்வுக் கட்டுரைகள் மட்டும் இணையதளத்தில் (painthamizh.com) வெளியிடப்படும்.
- நீங்கள் கட்டுரை அனுப்பிய ஆறு நாட்களுக்குள் உங்களது கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன்பின் கட்டணம் செலுத்தி, பதிவு படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும்.
கட்டுரையாளர்கள் தங்களுக்குரிய ORCID எண்ணைப் பதிவு செய்ய கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தவும்.
